“தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஏற்காவிட்டால் பிஎன் -னிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்”

shower canteenமஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை குளியலறை கேண்டீன் விவகாரத்தை  அம்பலப்படுத்திய ஸ்ரீ பிரிஸ்டினா தேசியப் பள்ளி பெற்றோர் தேசநிந்தனைச்  சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என்ற அறைகூவலை ஒப்புக்  கொள்ளாவிட்டால் பிஎன் -னிலிருந்து வெளியேற வேண்டும் என டிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங் கேட்டுக் கொண்டுள்ளார்.shower canteen1

அவை அவ்வாறு செய்யா விட்டால் சிலாங்கூர் அம்னோ தலைவர் நோ ஒமாருக்கு  ‘கிறுக்குப் பிடித்திருக்க வேண்டும்’ என மசீச தலைவர் சுவா சொய் லெக்  கண்டித்தது வெறும் பேச்சாக மட்டுமே இருக்கும் என அவர் சொன்னார்.

அந்த அறைகூவல் கிறுக்குத்தனமானது எனக் குறை கூறிக் கொண்டு சிலாங்கூரில்  பிஎன் கீழ் அம்னோவுடன் மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை ஒத்துழைப்பது  இன்னொரு wayang kulit (மேடை நாடகம்) ஆக கருதப்படும்,” என லிம் ஒர்  அறிக்கையில் தெரிவித்தார்.