துணைப் பிரதமர்: குற்றச் செயல்களை ஒடுக்க அரசாங்கம் நடப்புச் சட்டங்களைப் பயன்படுத்தும்

gunஅரசாங்கம் இந்த நாட்டில் கடுமையான குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு  நடப்புச் சட்டங்களைப் பயன்படுத்தும். புதிய சட்டம் அறிமுகம்  செய்யப்படுவதற்காகக் காத்திருக்காது.

நாட்டின் நடப்பு சட்ட வடிவமைப்பில் ‘1959ம் ஆண்டுக்கான குற்றத் தடுப்புச்  சட்டம்’ உள்ளது. ஆனால் அது அமலாக்கப்படவில்லை என துணைப் பிரதமர்  முஹைடின் யாசின் தெரிவித்தார்.

இப்போது குற்றச் செயல்களை ஒடுக்குவதற்கு அந்தச் சட்டத்தை பயன்படுத்த  இயலும் என அவர் சொன்னார்.

சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச் செயல்கள் அண்மைய காலத்தில்  அதிகரித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிக்கை விடுத்ததைத்  தொடர்ந்து கடந்த புதன் கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த விஷயம்  பேசப்பட்டது என்றார் அவர்.

‘கொலை போன்ற குற்றச் செயல்கள் நிகழ்வதை நாங்கள் கடுமையாகக்
கருதுகிறோம்.”

“ஆகவே கடுமையான, துணிச்சலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை  ஏற்பட்டுள்ளது,” என ஜோகூர் பாருவில் ஜோகூர் அம்னோ, ஜோகூர் மாநில  அரசாங்கம் ஆகியவற்றுடன் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது  முஹைடின் கூறினார்.