சர்ச்சைக்குரிய நாய் பயிற்றுநர் காணொளி தொடர்பில் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் அவர் மீது போலீசில் புகார் செய்துள்ளது.
முஹைடினின் கருத்துக்கள் குற்றவியல் சட்டத்தையும் தேசநிந்தனைச் சட்டத்தையும் மீறியுள்ளதா என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என அந்தப் புகாரைச் சமர்பித்த தாமான் சிகாம்புட் டிஏபி கிளைத் தலைவர் இயூ ஜியா ஹார் கூறினார்.
கோலாலம்பூரில் உள்ள ஜிஞ்சாங் போலீஸ் நிலையத்தில் அந்தப் புகார் இன்று காலை கொடுக்கப்பட்டது.
அந்தக் காணொளியில் இருந்தவர் முஸ்லிம் என்பது உறுதி செய்யப்படுவதற்கு முன்னர் “இஸ்லாம் மீதும் முஸ்லிம் உணர்வுகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடுமையான நடவடிக்கைகள்” மலேசியர்களிடையே நல்லிணக்கம் சீர்குலைவதற்கு வழி வகுத்து விடும் என முஹைடின் குறிப்பிட்டிருந்தார்.
நாளை மலேசிய இந்திய முன்னேற்ற சங்கமும் முஹைடினுக்கு எதிராக போலீசில் புகார் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.