ஹிண்ட்ராப்-பிஎன் கூட்டணி மீதான 100 நாள் அறிக்கை விரைவில் வெளியாகும்

waythaபிஎன் -உடன் தான் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணியின் விளைவுகள் குறித்த 100  நாள் அடைவு நிலை அறிக்கையை விரைவில் வெளியிடப் போவதாக மலேசிய  ஹிண்ட்ராப் சங்கம் அறிவித்துள்ளது.

அதன் தலைவர் பி வேதமூர்த்தி, செனட்டராகவும் பிரதமர் துறை துணை  அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட 100வது நாளில் அது வெளியிடப்படும் என  அதன் தேசிய ஆலோசகர் என் கணேசன் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“அந்த ஒப்பந்த நிபந்தனைகளுக்கு பிஎன் தெரிவித்த கடப்பாட்டுக்கு ஈடாக  ஹிண்ட்ராப் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிஎன் -னைத் தேர்வு செய்யுமாறு இந்த  நாட்டில் உள்ள இந்தியர்களைக் கேட்டுக் கொண்டது.”waytha1

“இப்போது பிஎன் திருப்பிச் செலுத்துவதற்கான நேரமாகும். இந்திய ஏழைகளையும்  ஒரங்கட்டப்பட்டவர்களையும் பிரதிநிதித்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட  நாங்கள் பொது மக்களுக்கு எங்கள் முதலாவது அறிக்கையை வழங்கத் தயார்  செய்து வருகிறோம்,” என்றும் கணேசன் சொன்னார்.

அந்த அறிக்கை விவரமாக இருக்கும். அதில் செய்யப்பட்டதும் சாதிக்கப்பட்டதும்  அமலாக்கப்படுவதும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் அந்த கால கட்டத்தில்  நாங்கள் எதிர்நோக்கிய சில சவால்களும் அதில் கூறப்பட்டிருக்கும்,” என்றும்  அவர் சொன்னார்.

தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பணம் கொடுத்து நாளிதழ்களில் தொடர்ந்து பல நாள்களுக்கு விளம்பரம் செய்தவர்கள் தங்களுடைய சாதனைகள அன்றாடம் அறிவிக்கவில்லை. அவ்வாறு செய்திருந்தால், இவ்வாண்டு இந்திய மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் இடங்கள் ஹிண்ட்ராப் செய்து கொண்ட ஒப்பந்தப்படி வழங்கப்பட்டதா என்பது இன்னேரம் தெரிந்திருக்குமே!