பெர்க்காசா: குவான் எங் பேராளர்களைச் சந்திக்க அஞ்சுகிறார்

DApபேராளர்களைச் சந்திக்க அஞ்சுவதால் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவுக்கு புதிதாக  தேர்தல் நடத்த அந்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்  விரும்பவில்லை எனப்  பெர்க்காசா தகவல் பிரிவுத் தலைவர் ருஸ்லான் காசிம் கூறிக்   கொண்டுள்ளார்.

“பெரும்பாலான டிஏபி பேராளர்களைச் சந்திக்க லிம் அஞ்சுவது நிச்சயம்.
அதனால் தான் கடந்த டிசம்பர் மாதம் நிகழ்ந்த கட்சித் தேர்தலில் 547
சட்டவிரோதப் பேராளர்கள் இருந்ததாக கூறப்பட்ட போது நாங்கள்
வியப்படையவில்லை.”

“அவர்கள் இல்லாவிட்டால் லிம், அவரது தந்தை லிம் கிட் சியாங், தலைவர்  கர்பால் சிங் ஆகியோருக்கு குறைவான வாக்குகளே கிடைத்திருக்கும்,” என்றார்  ருஸ்லான்.

மத்திய நிர்வாகக் குழுவுக்கு மீண்டும் தேர்தலை நடத்துமாறு கடந்த
செவ்வாய்க்கிழமை சங்கப்பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஒஎஸ்) டிஏபி-க்கு  ஆணையிட்டது.

ஆனால் தனது முடிவுக்கு ஆர்ஒஎஸ் காரணம் சொல்லாததால் அந்த ஆணையை  மீறப் போவதாக டிஏபி அறிவித்துள்ளது.