டிஏபி புதிய தேர்தல் நடத்த வேண்டும் என்று உத்தரவிடும் அதிகாரம் சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) க்கு இல்லை என்கிறார் அக்கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்.
சங்கச் சட்டத்தின் பிரிவு 16(1), பிரிவு 16(2) ஆகியவை அப்படி உத்தரவிடும் அதிகாரத்தை ஆர்ஓஎஸ்ஸுக்கு அளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, டிஏபி புதிய தேர்தல் நடத்த டிஏபி-இன் மத்திய செயலவைக்கு நீங்கள் உத்தரவு போட்டது உங்கள் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது, அது சட்டப்படி எங்களைக் கட்டுப்படுத்தாது”, என்று ஆர்ஓஎஸ்ஸுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சங்கப் பதிவதிகாரி கூறுவதுப் போல ஜ.செ.க.வின் தேர்தல் மீண்டும் நடைப் பெறுமேயானால் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்பட்டுவிடும். லிம் குவான் எங் கின் இச்செயலால் அக்கட்சியின் பதிவு ரத்தாகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது!