நீதிபதி: ஒரு தரப்பு மதம் மாற்றம் அனைத்துலக நடைமுறைகளுக்கு முரணானது

indiraபெற்றோர்களில் ஒருவருக்கு இன்னொரு சமயத்துக்கு மதம் மாறுவதற்கு உரிமை  இருக்கலாம். ஆனால் வயது குறைந்த பிள்ளைகளை இன்னொரு பெற்றோரின்  ஒப்புதல் இல்லாமல் மதம் மாற்றுவதற்கு அவருக்கு உரிமை இல்லை. ஏனெனில்  அது அனைத்துலக ஒப்பந்தங்களுக்கு முரணானதாகும்.

இவ்வாறு கூறிய உயர் நீதிமன்ற நீதிபதி லீ ஸ்வீ செங், குழந்தைகள் உரிமை  மீதான ஒப்பந்தம் (CRC), பெண்களுக்கு எதிரான எல்லா வகையான  பாகுபாடுகளுக்கும் எதிரான ஒப்பந்தம் (Cedaw) ஆகியவற்றை எடுத்துக்  காட்டினார்.

indira1தங்கள் பிள்ளைகளுடைய வளர்ப்பிலும் மேம்பாட்டிலும் இரண்டு
பெற்றோர்களுக்கும் பொதுவான பொறுப்புக்கள் இருப்பதை எல்லாத் தரப்புக்களும்  (நாடுகள்) உறுதி செய்ய வேண்டும் என CRC ஒப்பந்தத்தின் 18வது பிரிவு ம் Cedaw  உடன்பாட்டின் பிரிவு 16(1)ம்  பிரிவு 5ம்
கூறுகின்றன என்றும் அவர் சொன்னார்.

பிள்ளைகள் dua kalimah syahadah (சமயத்தை உறுதி செய்வது) சொல்லவில்லை  என்பதால் அவர்களது மதம் மாற்றம் செல்லாது என்றும் லீ தமது தீர்ப்பில்  கூறினார்.

எம் இந்திரா காந்தி வழக்கில் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மதம்  மாற்றியது செல்லாது என ஜுலை 25ம் தேதி தாம் தெரிவித்த முடிவுக்கு வழங்கிய  எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் நீதிபதி அந்த விவரங்களைக் கூறியுள்ளார்.