கொலையுண்ட ஹுசேன் அகமட்டின் புதல்வர் பாஸ்கால் நஜாடி மலேசியாவுக்குத் திரும்பி தமது தந்தையின் கொலை தொடர்பான விசாரணைகளுக்கு உதவ வேண்டும் என கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே விரும்புகிறார்.
ஹுசேன் அகமட் Ambank வங்கியைத் தோற்றுவித்தவர் ஆவார்.
“உண்மையில் என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிந்து கொள்ள
மலேசியாவுக்குத் திரும்பி போலீசாருடன் ஒத்துழையுங்கள்.” என முகமட் கேட்டுக் கொண்டார்.
“எங்களைச் சந்தியுங்கள். போலீஸ் விசாரணைக்கு உதவ நாங்கள் அவரைப் பேட்டி காண்போம்,” என நேற்றிரவு மஸ்ஜித் இண்டியா வட்டாரத்தில் மக்களுடன் நடந்து சென்ற பின்னர் அவர் நிருபர்களிடம் பேசினார்.
தமது தந்தையின் மரணம் முடியாமல் போன நில விவகாரத்துடன் சம்பந்தப்பட்டது எனக் கூறப்படுவதை பாஸ்கால் மறுத்துள்ளது பற்றி மலேசியாகினி வினவிய போது முகமட் அவ்வாறு பதில் அளித்தார்.
“எங்கள் நிறுவனம் அத்தகைய தொழிலில் ஈடுபடாததால் என் தந்தையின் கொலையில் முறிந்து போன நிலப் பேரம் ஏதுமில்லை,” என பாஸ்கால் சொன்னதாக பெர்னாமா வியாழக் கிழமை செய்தி வெளியிட்டிருந்தது.
நாட்டில் கொலைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியன் தானே என்று அலட்சியாமாக இருந்தால் பிறகு கொலைகாரன் ஜாதி மதம் எல்லாம் பார்க்க மாட்டான். போட்டுக் கொண்டே போய்க் கொண்டிருப்பான். காவல் துறை இனம் குணம் எல்லாம் பார்க்காமல் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது நாள் வரை எடுக்கவில்லை என்பதே நமது கணிப்பு.
சுட்டவன் சந்தேக பேர்வழி படம் உண்டு ” உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள அவர் மகன் இங்கு வரவேண்டுமாம் போலிஸ் கூறுகிறது?” அவனோ முதலில் சுட்டவனை பிடித்து போடுங்கள் என்கிறான். சவாலே சவால் ?