மக்கள் விரும்பும் எந்த மாற்றமும் நாட்டின் நல்வாழ்வுக்கு கவனமாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் ப்துல் ரசாக் சொல்கிறார்.
மாற்றம் வேண்டும் என்பதற்காக நாம் இப்போது அனுபவிக்கும் விஷயங்களை அழிப்பது எந்த நன்மையையும் தராது என்றார் அவர்.
“நாம் உருவாக்கியதை அழித்து விட்டு அதற்குப் பதில் கொண்டு வரப்படும் ‘மாற்றம்’ நல்லதாக இருக்குமா என்பது நமக்குத் தெரியாது.”
அவர் நேற்று பெக்கானில் மூத்த குடிமக்களுக்கு நோன்புப் பெருநாள்
அன்பளிப்புக்களை வழங்கிய போது பேசினார்.
மலேசியாவில் எதிர்க்கட்சிகள் விரும்புவதைப் போல மாற்றத்தைக் கொண்டு வந்த சில நாடுகள் இப்போது உண்மையான மாற்றத்தை அனுபவிக்கவில்லை. அங்கு குழப்பமும் உள்நாட்டுப் போருமே மூண்டுள்ளன,” என்றும் நஜிப் சொன்னார்.