கடந்த வாரம் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கிடம், அவர்மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்க எட்டு மசீச தொகுதிகள் கேட்டுக்கொண்டிருப்பது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “என் எதிரிகளை அறிவேன்.அவர்களைவிட எப்போதுமே நான் ஓர் அடி முன்னேதான் இருப்பேன். இந்த ஆட்டத்தில் அவர்களைக் காட்டிலும் எனக்கு அனுபவம் அதிகம்”,எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.
இதை அவரின் விசுவாசி ஒருவரிடம் குறிப்பிட்டபோது அவர், சுவா அரசியலில் கைதேர்ந்தவர் என்று புகழ்ந்து பேசினார்.
“எதிரிகள் தப்பு செய்கிறார்கள். அவரைக் குறைத்து மதிப்பிடுகிறார்கள். எல்லா தகவல்களையும் விரல்நுனியில் வைத்திருப்பார். நேரம் வரும்போது அடித்துச் சாய்ப்பார்”, என்றார்.