அதிகாரிகள் ஸ்கார்ப்பின் நீர்மூழ்கி ஊழலை புலனாய்வு செய்வதற்குப் பதில் சுவாராமை மருட்டுவதாகவும் அச்சுறுத்துவதாகவும் அதன் நிர்வாக இயக்குநர் இ நளினி கூறுகிறார்.
“அத்துடன் போலீசார் எங்களை மிரட்டுவதை விடுத்து இந்த நாட்டில் கடுமையான குற்றங்களை முறியடிப்பதற்கு தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் செலவு செய்ய வேண்டும் என்றும் நாங்கள் சொல்கிறோம்.”
“ஸ்கார்ப்பின் ஊழலுடன் தொடர்புடைய பெரிமெக்கார், தெராஸாஸி போன்ற நிறுவனங்களை போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மலேசிய நிறுவன ஆணையம் ஆகியவை விசாரிக்க வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்,” என அவர் சொன்னார்.
‘தகவல்களைச் சொல்கின்றவர்களை மருட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சந்தேகத்துக்குரிய ஊழல்வாதிகளை விசாரியுங்கள்,” என நளினி ஒர் அறிக்கையில் கூறியுள்ளார்.
பிரஞ்சு ஸ்கார்ப்பின் ஊழல் விவகாரம் தொடர்பான தனது நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதற்கு சுவாராம் நடத்திய விருந்து தொடர்பில் புகார் செய்யப்பட்டுள்ளதால் அறிக்கை வழங்குமாறு கடந்த வார இறுதியில் சுவாராம் நிர்வாக மன்ற உறுப்பினர் சிந்தியா கேப்ரியல் அழைக்கப்பட்டார்.
நீர்மூழ்கிக் கப்பலையா மலேசியா பிரான்சிடமிருந்து வாங்கியது ! நீரில் மூழ்காத கப்பலைத்தான் கொள்முதல் செய்ததாக எனக்கு நினைவு ! ஹா,,, ஹா …ஹா ….!