ஒரே மாதத்தில் 23 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன அதாவது ஒவ்வொரு நாளும் கிட்டதட்ட ஒருவர் சுடப்பட்டிருக்கிறார்.
ஜூன் 30- இலிருந்து ஜூலை 31வரை, செய்தித்தாள்களிலிருந்து பெறப்பட்ட தகவல் இது என்கிறார் பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின். இவற்றில் 10 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.
“இது ஒன்றும் கற்பனை அல்ல; இதுதான் உண்மை நிலவரம்”, என்றவர் குறிப்பிட்டார்.
அவசரகாலச் சட்டம் எடுக்கப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று சொல்லிக் கொண்டிருக்காமல், குற்றங்களை இழைத்தவர்கள்மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிம் வலியுறுத்தினார்.
இப்போது எல்லாம் ஆளை சுடுவது ,தோசை,வடை சுடுவது போல ஆயிருச்சி.