சீனர்களின் மேலாதிக்கம் கொண்ட டிஏபி ஓர் இனவாதக் கட்சி என்று கூறப்படுவதை மறுக்கிறார் பி.ராமசாமி.
“சீனர்கள் அதிகம் இருப்பதால் மட்டுமே அது இனவாதக் கட்சி ஆகிவிடாது. நாம் எல்லாருமே மலேசியர்கள். எங்கள் கொள்கைகள் எல்லா இனங்களுக்கும் ஏற்றவை”, என்று டிஏபி தலைவரும் பினாங்கு துணை அமைச்சருமான அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
“பிஎன்னைப் பாருங்கள், அது, இன அடிப்படையில் உருவானது. டிஏபி அப்படி அல்ல. சீனர்கள் அதிகம் இருப்பதை வைத்து அதை இனவாதக் கட்சி என்பது நியாயமல்ல”, என்றார்.
டி எ பி ,மலேசியா நாட்டிலுள்ள ஒரு பொதுவான கட்சி ,சீனர்களும் மலேசியாவில் பிறந்தவர்கள்தான் ,சரியாக சொன்னார் ராமசாமி
எல்லாம் சரி தான். மொழி என்று வரும்போது சீன மொழி தானே முன்னுக்கு நிற்கிறது! அவர்களுடைய பதாகைகளில் பல சமயங்களில் தமிழுக்கு இடம் கொடுப்பதில்லையே!
ஆனால் மலேசியாவில் பிறந்த ராமசாமி டி.எ.பியில் மத்திய செயலவை உறுப்பினராக அதுவும் துணை முதலைமைச்சராக இருந்தும் வெற்றிப் பெற முடியவில்லை. . காரணம் என்ன. யோசித்து பார்க்க வேண்டும்.
பல்லின கட்சி என்றால் 5 வருடம் 2ஆம் துணை முதல்வராக இருந்த பேராசிரியருக்கு 1ஆம் துணை முதல்வர் பதவி ஏன் வழங்க வில்லை? ஒரு இந்தியரோ அல்லது மலாய் காரரோ dap யில் பொது செயலாளராக வர முடியுமா?