துப்பாக்கிக் குற்றங்களுக்கும் இஓ அகற்றப்பட்டதற்கும் தொடர்புண்டு

polisசுடும்  ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட  சம்பவங்கள் உள்பட,  குற்றச்செயல்கள்  அதிகரித்திருப்பதற்கும்  அவசரகாலச் சட்டங்கள்(இஓ) அகற்றப்பட்டதற்கும்  தொடர்பு இருக்கலாம் என்பதை போலீஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும்  குற்றச்செயல்கள் அதிகரித்திருப்பது  பற்றி கூட்டரசு சிஐடி இயக்குனர் ஹாடி ஹோ அப்துல்லாவிடம் வினவியதற்கு,  “அதைத் தற்செயலானது என்று சொல்வதற்கில்லை”,என்றார்.

“2012-இலிருந்து 2013 ஜூன்வரை நாட்டில் கைது செய்யப்பட்ட 130,000 பேரில் கிட்டதட்ட 30 விழுக்காட்டினர் திரும்பத் திரும்பக் குற்றம் செய்பவர்கள்”,  என்றாரவர்.

இவர்களில் எத்தனை பேர் முன்னாள் இஓ தடுப்புக் கைதிகள் என்று வினவியதற்கு அந்தப் புள்ளிவிவரம் பின்னர் ஒரு நாளில் வெளியிடப்படும் என்றார்.