அதிகாரத்துவ கார்களை மாற்றுவது ஏன்?- டிஏபி

lau1அரசாங்கம்  அதன் அதிகாரத்துவ கார்களை மாற்ற முடிவு செய்திருப்பது ஏன் என்று டிஏபி கேள்வி எழுப்பியுள்ளது.

இப்போதுள்ள புரோட்டோன்  கார்களுக்குப் பதிலாக பயன்படுத்தப்படவுள்ள ஹொண்டா கார்கள் பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  தொகுதியில் பூட்டப்படுபவை  என்று  கம்போங்  துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கூறினார்..

“அரசாங்கம் மற்ற வகை கார்களை விடுத்து ஹொண்டா  எக்கோர்ட் 2.4L, 2.0L வகை கார்களைப் பயன்படுத்துவது ஏன்?

“இரண்டு வகை கார்களும் பெக்கானில் டிஆர்பி-ஹைகோம் நிறுவனத்தால் பூட்டப்படுகிறதே, அதற்காகவா?அந்த நிறுவனம் சைட் மொக்தார் அல்-புகாரிக்குச் சொந்தமானதாயிற்றே, அற்காகவா?”, என்றவர் வினவினார்.