பிரதமரைக் குறை சொல்கின்றவர்களை சாடுகிறார் துணை அமைச்சர் ரசாலி

razali ibrahimஉள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம், அவசர காலச் சட்டம் ஆகியவை ரத்துச் செய்யப்பட்ட பின்னர் கூடி விட்ட வன்முறைக் குற்றங்களை ஒடுக்க பிரதமர் நஜிப்  அப்துல் ரசாக் தவறி விட்டதாகக் கூறிக் கொள்கின்றவர்களை பிரதமர் துறை  துணை அமைச்சர் ரசாலில் இப்ராஹிம் சாடியுள்ளார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் காலத்திற்கு
ஒவ்வாதவை, பொருத்தமில்லாதவை எனக் கூறிக் கொண்டு அவை ரத்துச்  செய்யப்பட வேண்டும் என அதே நபர்கள் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டதாக  அவர் சொன்னார்.

“வளர்ச்சி அடைந்த நாடாகத் திகழ் நாம் விரும்பினால் அந்தச் சட்டங்கள் போக  வேண்டும் என அவர்கள் கூறினார். இப்போது அவை ரத்துச் செய்யப்பட்டு  விட்டன. குற்றங்கள் கூடியுள்ளன. டத்தோ ஸ்ரீ நஜிப் மீது அவர்கள் இப்போது பழி  போடுகின்றனர்,” என்றார் அவர்.

மூவார் தொகுதிக்கான எம்பி-யுமான ரசாலி சுங்கை பாலாங் புசாரில் நோன்புப்  பெருநாள் அன்பளிப்புக்களை வழங்கும் சடங்கில் நேற்று உரையாற்றினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டமும் அவசர காலச் சட்டமும் இன நல்லிணக்கத்தை  நிலை நிறுத்தவும் மக்களிடையே பரஸ்பரம் மரியாதை நிலவவும் உதவியதாகவும்  ரசாலி சொன்னார்.