செம்பனை எண்ணெய் விலைகள் உறுதியற்றதாக இருப்பதால் FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd-ன் பங்கு விலைகள் இறங்கியுள்ளன.
அதன் பங்கு விலை செம்பனை எண்ணெயின் தேவை விநியோகம் ஆகியவற்றின் ஏற்ற இறக்கத்தைச் சார்ந்துள்ளதாக அதன் தலைவர் முகமட் ஈசா அப்துல் சாமாட் கூறினார்.
“இப்போது செம்பனை எண்ணேய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நிறுவனத்தின் முக்கியத் தொழில் செம்பனைத் தோட்டத்தைச் சார்ந்துள்ளது. அதனால் FGV நிறுவனப் பங்கு விலைச் சரிவை தவிர்க்க முடியாது.”
புர்சா மலேசியா பங்குச் சந்தையில் FGV பங்கு விலை வீழ்ச்சி பற்றிக்
கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது ஈசா அவ்வாறு கூறினார்.
அவர் போர்ட்டிக்சனில் 22 மாவட்ட பள்ளிவாசல்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நன்கொடைகளை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களைச் சந்தித்தார்.
சும்மா அள்ளி விடாதே அங்கே கஜானா காலின்னு சொல்லிரு!