சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட பல கொலைச் சம்பவங்களுக்குப் பின்னணியில் உள்ள சந்தேகத்துக்குரிய நபர்களைப் போலீஸ் பணிக் குழு அடையாளம் கண்டுள்ளது.
அந்தச் சம்பவங்களில் Arab-Malaysian Banking Group வங்கிக் குழுமத்தைத் தோற்றுவித்த ஹுசேன் அகமட் நஜாடி கொலையுண்டதும் அடங்கும் எனத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் கூறினார்.
“நாங்கள் விரைவில் அந்தப் புலனாய்வுகளை நிறைவு செய்வோம். அண்மைய காலமாக சுடும் ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட கொலைகளும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும் அதிகரித்துள்ளது பற்றி பொது மக்கள் அடைந்துள்ள கவலையை நாங்கள் அறிவோம்,” என்றார் அவர்.
அலோர் ஸ்டாரில் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீரைச் சந்தித்த பின்னர் காலித் நிருபர்களிடம் பேசினார்.