மலேசியாவில் ரிம 1,000-க்குக்கூட கூலிக்குக் கொலை செய்ய ஆள் கிடைப்பானாம்.
குற்றவியல் நிபுணர் அக்பார் சத்தார் மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் இவ்வாறு கூறியுள்ளார்.
“அது மட்டுமல்ல. வெளிநாட்டில் பயன்படுத்தப்பட்ட சுடும் ஆயுதங்களும் குறைந்த விலைக்கு, ரிம700க்கும் குறைவாகக்கூட கிடைக்கின்றன”, என்றாரவர்.
ட்ரேன்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியாவின் தலைவருமான அக்பார், அவசரகாலச் சட்டம் (இஓ) அகற்றப்பட்டது “அவசரமாக செய்யப்பட்ட செயலாகும்”, என்கிறார்.
“கொலை செய்வதில் அனுபவம் உள்ளவர்கள், கொலை செய்யும் துணிச்சல் உள்ளவர்கள்தான் கொலைகளைச் செய்கிறார்கள். எனவே, அவர்கள் முன்னாள் இஓ கைதிகளாகத்தான் இருக்க வேண்டும்”, என்றார்.
மலேசியா நாட்டு சட்டப்படி ஒருவர் லைசன்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திந்தாலே, தூக்கில் இடப்படும் என்று ஏற்க்கனவே எழுதப்பட்ட சட்டமாகும்.பிறகு எதற்கு புதுசா இஒ, பிஒ என்று?
அப்படி எத்தனை பேருக்கு நம் நாட்டில் தூக்கு தண்டனை கொடுத்து இருகிறார்கள்????