குதப்புணர்ச்சி வழக்கு இரண்டு விசாரணையின் போது அரசாங்க வழக்குரைஞர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றவர்கள் அந்த விசாரணையின் போது தமது நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் துணை சொலிஸிட்டர் ஜெனரல் இரண்டு முகமட் யூசோப் ஜைனல் அபிடின் கூறியுள்ளார்.
தாம் அத்தகையை குற்றச்சாட்டுக்களைப் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
ஏனெனில் அந்தக் குற்றச்சாட்டில் யாரும் குறிப்பாகச் சொல்லப்படவில்லை என்பதால் அந்தக் குற்றச்சாட்டே கேள்விக்குரியது என முகமட் யூசோப் தெரிவித்தார்.
“அந்த வழக்கில் அரசாங்கத் தரப்பை நான் வழி நடத்திய போது என்னுடைய நடத்தையை மக்கள் கவனித்திருந்தால் நான் எப்படிப்பட்டவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்குப் போதுமானது என்று மட்டும் தான் நான் சொல்வேன்.
அத்துடன் நான் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் என்னுடைய பணிகளையும் பாருங்கள்.”
குதப்புணர்ச்சி வழக்கில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த அன்வார் இப்ராஹிம் 2008 தொடக்கம் வழக்குரைஞர் கட்டணமாக 50 மில்லியன் ரிங்கிட்டை பிரதிவாதித் தரப்புத் தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங்-கிற்கு செலுத்தியுள்ளதாக கூறிக் கொள்ளும் அனாமதேயக் கடிதங்கள் கிடைத்துள்ளதாக மஸ்லான் இஸ்மாயில் தெரிவித்துள்ளதற்கு முகமட் யூசோப் பதில் அளித்தார்.
அந்தப் பணத்தில் ஒரு பகுதி நீதிபதிகளுக்கும் அரசாங்க வழக்குரைஞர்களுக்கும் கொடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும் மஸ்லான் கூறிக் கொண்டார்.