‘பிரான்ஸுக்குள் மூவர் நுழைந்ததையும்’ ஸ்கார்ப்பின் புலனாய்வு விசாரிக்கின்றது

scorpeneடிசிஎன்எஸ் என்னும் பிரஞ்சு கப்பல் கட்டும் நிறுவனம் இரண்டு ஸ்கார்ப்பின்  நீர்மூழ்கிகளை மலேசிய அரசாங்கத்திற்கு விற்றதில் கையூட்டு கொடுக்கப்பட்டதாக   கூறப்படுவதை புலனாய்வு செய்யும் பிரஞ்சு நீதிபதிகள் 1999ம்  ஆண்டு தொடக்கம் மூன்று தனிநபர்கள் பிரான்ஸுக்குள் நுழைந்தது பற்றியும்  விசாரிப்பதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

நஜிப் அப்துல் ரசாக், அப்துல் ரசாக் பகிந்தா, அல்தான்துயா ஷாரிபு ஆகிய அந்த  மூவரும் பிரான்ஸுக்கு சென்றுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் அவர்கள்  பிரான்ஸுக்குள் நுழைந்ததும் வெளியேறியதும் குடிநுழைவு ஆவணங்களில் பதிவு  செய்யப்படவில்லை.scorpene1

அல்தான்துயா பிரான்ஸுக்குள் நுழையவில்லை என்பதை பிரஞ்சு ஆவணங்கள்  காட்டுகின்றன என்றும் அவர் அந்தப் பேரத்தில் சம்பந்தப்படவில்லை என்றும்  முன்னாள் தரகரான ஜாஸ்பி சிங் சாஹ்ல் கூறிக் கொண்டுள்ளார்.

“அந்த மூவருடைய பெயர்களும் எல்லக் கடப்பு கோப்புக்களில்
எழுதப்பட்டுள்ளதா என்பதையும் 1999-லிருந்து அவர்கள் பிரஞ்சுப் பிரதேசம்  வழியாக கடந்து சென்றனரா என்பதையும் ஸ்கார்ப்பின் விசாரணைக்குத் தலைமை  தாங்கும் நீதிபதிகள் அறிய விரும்புகின்றனர்,” என இணையத்தில்  வெளியிடப்பட்டுள்ள பிரஞ்சு நீதிமன்றத்தின் 54வது ஆவணத்தில்  கூறப்பட்டுள்ளது.

எல்லைப் போலீஸ் மத்திய இயக்குநரகத்துக்கு தொலை நகல் வழி அந்தக்  கேள்வியை நீதிமன்றம் அனுப்பியுள்ளதாக அந்த வட்டாரம் தெரிவித்தது.

“வேறு அர்த்தத்தைக் கொண்ட பெயர்கள்” காணப்பட்ட போதிலும் தேசிய எல்லைக்  கடப்பு கோப்புக்களில் அந்த மூவருடைய பெயர்களும் இல்லை எனக் கூறும் பல  ஆவணங்கள் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் தேதி நீதிமன்றத்துக்குக்  கிடைத்தன.