Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை தோல்வி கண்டால் சாலை விதிகள் கடுமையாக அமலாக்கப்படும்

policeநடப்பு Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை விபத்து  உயிரிழப்புக்களை குறைக்கத் தவறினால் போலீசார் சாலை விதிகளை கடுமையாக அமலாக்க வேண்டியிருக்கும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்கார் சொல்கிறார்.

சாலைகளைப் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதற்கு
அவசியமானால் சாலை விதிகள் ‘முழுமையாக அமலாக்கப்படும்’ என அவர் சொன்னார்.

“கடந்த காலத்தில் நாங்கள் மக்களுக்கு அறிவுரை சொல்லும் அணுகுமுறையைப் பின்பற்றினோம். ஆனால் ஒட்டுநர்களுடைய போக்கை அது மாற்றவில்லை. ஆகவே Ops Selamat சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்கவில்லை என்றால் போலீசார் முழுமையான அமலாக்க அணுகுமுறையை
பின்பற்றுவர்.”

காலித் நேற்று புக்கிட் அமான் முதுநிலை அதிகாரிகள் உணவு விடுதியில்
நிருபர்களிடம் பேசினார்.