மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள அர் ரஹ்மான் பள்ளிவாசலில் ஜுன் 22ம் தேதி கூடியதற்காக அமைதியாக ஒன்றுகூடும் சட்டத்தின் கீழ் மூன்று பிகேஆர் இளைஞர் தலைவர்கள் மீது இன்று குற்றம் சாட்டப்பட்டது.
29 வயது நஸ்ரி முகமட் யூனுஸ், 38 வயது சம்சுல் இஸ்காண்டார் யூஸ்ரி, 36 வயது கைரி அனுவார் ஜைனுடின் ஆகிய அந்த மூவர் மீது கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றில் கூடுவது தொடர்பான அந்தச் சட்டத்தின் பிரிவு 4 (2) (b)-யின் கீழ் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த மூவரும் குற்றச்சாட்டை மறுத்தனர். ஈராயிரம் ரிங்கிட் சொந்த
உத்தரவாதத்துடன் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
அது செப்டம்பர் 23ம் தேதி வழக்கு நிர்வாகத்துக்கு சமர்பிக்கப்படும் என்றும் விசாரணை டிசம்பர் 11ம் தேதி தொடங்கும் என்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாட் கனி அப்துல்லா அறிவித்தார்.
நாட்டு மக்களை பயமுறுத்திக்கொண்டு இருக்கும் கொலை, கொள்ளை, துப்பாக்கி சூடு ஆகியவற்றில் இருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் ஏன் போலிஸ் இப்படி வெட்டி வேலை செய்கிறதோ…..
இப்படி அமைதியாக ஒன்று கூடும் இளைஞர்களால் தான் நாட்டின் கொலை, கொள்ளைகள் கூடுகிறது என்று காவல் துறை நினைத்திருக்கலாம்!