நாடு முழுவதும் 250,000 பேர் போதனைகளைப் பின்பற்றுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் 10 தீவிரமான குழுக்களைச் சார்ந்தவர்கள் என உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் அப்துல் ரஹிம் முகமட் ராட்சி சொன்னார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அது மூன்று முகாம்களுடன் சிறிய சமூகமாக இருந்தது. ஆனால் இப்போது அவர்கள் நாடு முழுவதும் விரிவடைந்து விட்டனர் என அவர் நேற்று தெரிவித்தார்.
“அவர்களுடைய வளர்ச்சிக்கான காரணங்களில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடும் ஒன்றாகும். சமூக இணையத் தளங்கள் வழியாக போதனைகள் பரப்பப்படுகின்றன,” என அவர் புத்ரா ஜெயாவில் சொன்னார்.
ஷியா தத்துவம் ‘ஹராம்’ (இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது) என இஸ்லாமிய விவகாரங்களுக்கான மலேசிய தேசிய பாத்வா மன்றத்தின் Muzakarah சிறப்புக் குழு 1966ம் ஆண்டு மே 5ம் தேதி அரசாங்கத் தகவல் ஏட்டில் பிரகடனம் செய்துள்ளது.
ஷியா இயக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புக்களும் கூட்டாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்துல் ரஹிம் கேட்டுக் கொண்டார்.
தடை செய்யப்பட்ட ஒரு இயக்கம், நாட்டு மக்களை குறிப்பாக முஸ்லிம் மக்களை திசை திருப்பிக்கொண்டிருக்கும் “ஹராம்” இயக்கத்தை வளரவிடுவது சரியில்லையே! 250,000 பேர் நம் நாட்டுக்கு செய்யும் துரோகமல்லவா? அப்படியென்றால் தேச நிந்தனை சட்டம் கொண்டுவரவேண்டும்!! அல் ஹர்காம் போன்ற ஒன்று மீண்டும் தலை தூக்க விடலாமா? நோ ….நோ …..!!
விளங்காம பேசாதீர்கள் ரஜூலா. இஸ்லாத்தில் ஷியா போதனையைப் பின்பற்றுபவர்கள் எத்தனையோ கோடி பேர்கள் இந்த உலகத்தில் இருகின்றார்கள். ஏதோ மலேசியாவில் மட்டும் இதனை தடை செய்து என்னத்த காண போகின்றார்கள் என்று தெரியவில்லை.