ஜாக்கிம்: பாடம் கற்பிக்க மஸ்னாவைத் தண்டியுங்கள்

maznahநாய் பயிற்றுநர் மஸ்னா யூசோப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  என ஜாக்கிம் எனப்படும் மலேசிய இஸ்லாமிய விவகார மேம்பாட்டுத் துறை  மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சமூகத்திற்கு ஒரு படிப்பினையாக அது அமையும் என அதன் தலைமை இயக்குநர் ஒஸ்மான் முஸ்தாபா சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி  வெளியிட்டுள்ளது.

“அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் மீண்டும் அதனைச் செய்யக்  கூடாது என அது அவருக்கும் குறிப்பாக சமூகம் முழுமைக்கும் ஒரு பாடமாக  இருக்கும்.”

மஸ்னா தமது நாய்களுடன் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதைக் காட்டும்  அந்த வீடியோ இஸ்லாத்தை அவமானப்படுத்துகின்றது என கடந்த வாரம் ஜாக்கிம் மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் தெரிவித்தது.

“இஸ்லாத்தில் எல்லா விலங்குகளும் ஒரே மாதிரியானவை தான். ஆனால்  புனிதத்தன்மையைப் பொறுத்த வரையில் கோட்பாடு வேறுபடுகின்றது,” என  ஒஸ்மான் சொன்னதாகவும் அந்த ஏட்டின் செய்தி குறிப்பிட்டுள்ளது.