பினாங்கு சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் சொத்து விவரங்களை அறிவிக்க வேண்டும்.
இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் அவ்வாறு முடிவுசெய்யப்பட்டதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
“சொன்னதைச் செய்து வாக்குறுதிகளைக் காக்கும் அரசு என்ற முறையில் நாங்கள் அனைவரும் சொத்து விவரங்களை அறிவிப்போம்”, என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
ஆனால், அவர்களின் குடும்பத்தார் சொத்துக்களை அறிவிக்க வேண்டியதில்லை.
ஒரு நல்ல எடுத்துக்காட்டு, உதாரணம்! பிரச்சனை என்னவென்றால், குடும்பத்தாரின் சொத்து விபரம் ? பினாமி என்ற பேரில் குமியும், குமிக்கப்படும் சொத்துதானே விஸ்வரூபம் எடுக்கிறது. அண்ணன் தம்பி, மாமன், மச்சான் இவங்கள விட்டுத்தள்ளுங்க – ஆனா மனைவி அல்லது மனைவிகள், பிள்ளைகள் சொத்துக்களையும் சொத்து விவரங்களுடன், உறுப்பினர் பதவி ஏற்றபின் மற்ற குடும்பத்தார் கைவசமுள்ள அசையும் அசையா சொத்துக்களையும் வாங்கிய விபரங்களையும் தெரிவிப்பது நல்லது. இந்த கொள்கையை நாட்டின் எல்லா அதிகாரிகளும் கடைபிடித்தால் ஏது வம்பு??
அட்ரா சக்க அப்படி போடு அருவாள, என் பெயிருல ஒன்னும் இல்ல ஆனால்…… முக்கியமா மனைவி,பிள்ளைகளின் பெயரில் உள்ள சொத்துகளை பார்க்கணும் உசார்….