முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கும்போதே தூங்கி விடுவார்.பலரும் இதைச் சுட்டிக்காட்டி குறைசொன்னதும் உண்டு, கேலி செய்ததும் உண்டு.
ஏன் இப்பழக்கம் என்பதை “Awakening, the Abdullah years in Malaysia” என்னும் நூலில் அவரே விளக்கியுள்ளார்
அப்துல்லாவுக்கு sleep apnea என்ற குறைபாடு இருந்ததாம். அதுதான் அடிக்கடி தூங்கி விடுவதற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.
இக்குறைபாடு உள்ளவர்கள் காரோட்டும்போதுகூட தூங்கிப் போகும் அபாயம் உண்டு என்றவர் எச்சரிக்கிறார்.
நாட்டின் பிரதமர்களிலே உண்மையில் ஜனநாயகத்திற்கு உயிர் கொடுத்தவர் பாக் லா. நாட்டை தன் இரும்புப் பிடியில் வைத்திருந்த மகாதீரின் சர்வதிகாரத்தைச் சற்று தளர்வு படுத்தியவர். இவரின் ஆட்சியில்தான் உண்மையில் மக்கள் சுதந்திரமாக வாய் திறந்து கருத்துகளை வெளியிட்டனர். உண்மையில் சிறந்த மனிதர். சொந்த இனத்தால் தூக்கி வீசப்பட்டார். மகாதீர் என்ற உத்தமசீலரால் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். கண்டிப்பாக ஜனநாயக தாயின் மடியில் பிறந்த பிள்ளைகளில் ஒருவராக உங்களை ஏற்றுக் கொள்ளும் நாள் உருவாகும். கவலையை விடுங்கள்.
உண்மை. அவர் நல்ல ஜனநாயகவாதி!
இந்த புத்தகம் கண்டிப்பா படிக்கணும்
மகாதீர் போன்ற இனவாதியிடமிருந்து உண்மையிலேயே நாட்டை நல்ல வழியில் நடத்தியவர். தில்லுமுல்லு, திருகுதாளம் ஏதும் இல்லாத தேர்தலை நடத்தியவர். அநியாயமாக தண்டிக்கப் பட்ட அன்வாரை விடுவித்தவர். மகாதீர் முண்டத்தைப் போல மீண்டும் தேவை இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை.. மீன்பிடி கிராமத் தலைவன் முகிடினின் இனவெறியாலும் மகாதீரின் சுயநலத்தாலும் பழிவாங்கப் பட்ட ஒரு நல்ல பிரதமர்.