லீ குவான் இயூ: இன அடிப்படை அரசியல் மலேசியாவுக்குப் பாதகமானது

leeமலேசியாவின் இன அடிப்படை கொள்கைகள் அதனை பாதகமான சூழ்நிலையில்  வைத்துள்ளதாக முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் இயூ சொல்கிறார்.

“எல்லா இனங்களையும் சேர்ந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளும் சமூகத்தை  உருவாக்குவதற்குத் தேவைப்படும் ஆற்றலையும் வளத்தையும்  அது சுருக்கி விடுகின்றது”  என சிங்கப்பூரில் நேற்று வெளியிடப்பட்ட தமது புதிய புத்தகத்தில் லீ அவ்வாறு
எழுதியுள்ளார்.

“ஒரு மனிதனின் உலகக் கண்ணோட்டம்” என்பது அந்தப் புத்தகத்தின்
தலைப்பாகும்.

“ஒர் இனத்தின் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு அவர்கள் அந்த ஆற்றலை  இழக்கவும் தயாராக இருக்கின்றனர்.”

“துடிப்பான மற்ற மாநகரங்களிடம் தான் அந்த ஆற்றலை இழப்பதை மலேசிய  அரசாங்கம் அண்மைய காலமாக உணரத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில்  வாழும் மலேசியர்களை மீண்டும் கவருவதற்கு அது முயற்சிகளையும்  தொடங்கியுள்ளது.”

“ஆனால் அந்த முயற்சிகள் மிகவும் குறைவானவை, மிகவும் தாமதமானவை,” என  லீ சொன்னார்.

அவர் சிங்கப்பூர் அமைச்சரவையில் மதியுரை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

அந்தப் புத்தகத்தில் மலேசியா குறித்த அத்தியாத்தின் தலைப்பு: ‘மலேசியா-  மாறுபட்ட பாதை’ என்பதாகும்.

இந்த உலக மயத்தில் மக்களுடைய தேர்ச்சி, மூளை வலிமை, ஆற்றல்
ஆகியவற்றைப் பொறுத்து ஒரு நாட்டின் சாதகமான போட்டி நிலை
அமைந்துள்ளது.

“மலேசியா இழந்து வருகிறது. மற்ற நாடுகள் அந்நியப் போட்டியில் சாதகமான  சூழலைப் பெற்று வெற்றி பெற அது உதவுகின்றது.”