மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம், ஓராங் அஸ்லிகள் தொடர்பான சட்டங்கள், கொள்கைகள் ஆகியவை பற்றி அரசாங்கத்துக்கு ஆலோசனை கூற ஒரு புதிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
பூர்விகக் குடியினரின் நில உரிமைகள் குறித்து இரண்டாண்டுகளாக விசாரணை நடத்திய சுஹாகாம், 18 பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை ஒன்றை பிரதமர்துறை அமைச்சர் பால் லவ்- இடம் நேற்று வழங்கியது.
ஓராங் அஸ்லி மேம்பாட்டுத்துறை, பூர்விகக் குடியினரின் நலன்காக்கவும் நலன்பேணவும் தவறிவிட்டது எனவும் அது குறைகூறியுள்ளது.
உண்மையை சொல்லபோனால் ஓராங் அஸ்லி களே , அதிகம் ஏமாந்த குடிமக்கள் , சுரண்டபட்ட சமுதாயம், ஒதுக்கபட்ட சமுதாயம், அரசாங்கத்தால் குழிதோண்டி புதைக்கபட்ட சமுதாயம் . சுஹாகாம் அவர்களுக்கு ஒரு நல்வழியை காட்டவேண்டும். இந்த மண்ணுக்கு சொந்தக்காரன் குடியிருக்க மண்வேண்டி கையேந்தி நிற்கிறான் !!
ஓராங் அஸ்லிகளை காட்டிலும் தமிழர்கள் இந்த நாட்டில் முன்னேறிவிட்டனர்…பாவம் ஓராங் அஸ்லி, சொந்த நாடு இருந்தும் முன்னேற முடியவில்லை, நேற்று வந்த வந்தேறிகள இன்று நன்றாக வாழ்கின்றனர்!