கோலாலும்பூர் சிஐடி தலைவர் கூ சின் வா-வும் பிரபல வணிகர் கொலையில் தேடப்படும் சந்தேகத்துக்குரிய நபரும் ஒரே மாதிரியாக இருப்பதாக இணையத்தில் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் கூ, இருவருக்கும் முக்கிய வேறுபாடு இருப்பதாக நினைக்கிறார்.
“நான் அவனைவிட அழகானவன்”, என்றவர் த ஸ்டார் ஆன் லைன்னுக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
மலேசியாகினி வாசகர்கள்கூட இருவருக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி இருந்தனர்.
“சிஐடி தலைவர் கூ சின் வாபோல் அல்லவா இருக்கிறது. இரட்டையர்கள். பிறந்ததும் பிரிந்து விட்டனரோ?
“மலேசியாவில் தயாரிக்கப்பட்ட போலிவூட் திரைப்படம்போல் இருக்கிறதே”, என்று ஒரு வாசகர் குறிப்பிட்டிருந்தார்.
அரேப்-மலேசிய வங்கி நிறுவனர் உசேன் அஹமட் நஜாடி சுட்டுக்கொல்லப்பட்டதன் தொடர்பில் அந்த 44-வயது சந்தேகத்துக்குரிய நபர் தேடப்பட்டு வருகிறார்.

























