அப்துல்லா: அம்னோவுக்குச் சீர்திருத்தங்கள் தேவை

trioஅம்னோவுக்குச் சீர்திருத்தங்கள் தேவைப்படுவதாக அதன் முன்னாள் தலைவரும்  முன்னாள் பிரதமருமான அப்துல்லா அகமட் படாவி சொல்கிறார்.

அம்னோ தற்போது திருப்பு முனையில் உள்ளது. அதனை உடனடியாகச்  சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

இவ்வாறு அப்துல்லா “விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்”  என்னும் தலைப்பிலான தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அம்னோ இப்போது திருப்புமுனையில் நிற்கிறது. உண்மையாகச் சொல்ல  வேண்டுமானால் அதற்குச் சீர்திருத்தம் தேவை.”samy1

“சீர்திருத்தங்களை அமலாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை நான் பார்க்கிறேன்.  ஆனால் அதற்கான விருப்பத்தை நான் இன்னும் காணவில்லை,” என்றும் அப்துல்லா சொன்னார்.

Ketuanan Melayu (மலாய் மேலாண்மை) என்பது உரிமை அல்ல. நீங்கள்  அதற்காக உழைத்து அதனைப் பெற வேண்டும் என அப்துல்லா குறிப்பிட்டார்.

“நீங்கள் பூமிபுத்ரா என்பதால் அனைவரும் உங்களிடம் எல்லாவற்றையும் கொடுத்து  விட்டு ‘துவான்’ என உங்களை அழைப்பர் என நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது,”  என விரைவில் வெளியிடப்படவிருக்கும் அந்தப் புத்தகத்தில் அப்துல்லா
எழுதியுள்ளார்.