நோன்புப் பெருநாளுக்குப் பின்னர் என்னைச் சந்தியுங்கள் என குவான் எங் ஆர்ஒஎஸ் தலைவரிடம் சொல்கிறார்

limநோன்புப் பெருநாளுக்குப் பின்னர் டிஏபி தலைவரை சந்திக்குமாறு ஆர்ஒஎஸ்  தலைவர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

“கணக்காயர் நிறுவனம் ஒன்று உறுதி செய்த புள்ளிவிவரங்களுக்குப் பதில்  ஆதாரமற்ற பொய்களை” தாம் நம்புவதற்கான காரணத்தை விளக்குவதற்கு அப்துல்  ரஹ்மான் தம்மைச் சந்திக்கலாம் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான்  எங் கூறியுள்ளார்.

“ஆதாரமற்ற பொய்களுக்கு” பிஎன் ஆதரவு ஊடகங்களான நியூ ஸ்ட்ரெய்ட்ஸ்  டைம்ஸ் மீதும் உத்துசான் மலேசியா மீதும் அவர் பழி சுமத்தினார்.

அந்தச் சந்திப்புக்கு நேரம் கேட்டு லிம் அப்துல் ரஹ்மானுக்குக் கடிதம்
எழுதியுள்ளார்.

காரணங்கள் ஏதும் கொடுக்கப்பட வேண்டிய தேவை இல்லாமல் புதிய தேர்தலை  டிஏபி நடத்த வேண்டும் எனத் திரும்பத் திரும்பச் சொல்வதின் மூலம் அப்துல்  ரஹ்மான் தாம் ‘மன்னர்’ என்பதை போல நடந்து கொள்வதாகவும் லிம் சொன்னார்.

சட்டப்பூர்வமான காரணங்கள் ஏதும் இல்லாததால் தமது முடிவுக்குக் காரணம்  சொல்ல அப்துல் ரஹ்மான் மறுக்கிறாரா என்றும் அவர் வினவினார்.

 

TAGS: