வேள்பாரி: ‘ஜஸ்பால், மைக்கா பற்றி சொன்னதை நிரூபியுங்கள்’

maikaபுதிதாக மூண்டுள்ள ஒரியண்டல் கேப்பிட்டல் அஸுரன்ஸ் பெர்ஹாட் பிரச்னை  தொடர்பாக தாம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்களை செனட்டர் ஜஸ்பால் சிங் ஏழு  நாட்களுக்குள் நிரூபித்தால் தாம் இப்போது வியூக இயக்குநராக பணியாற்றும்  மஇகா-விலிருந்து விலகிக் கொள்வதாக முன்னாள் மைக்கா ஹோல்டிங்ஸ் தலைமை  நிர்வாக அதிகாரியான எஸ் வேள்பாரி வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆனால் ஜஸ்பால் ஒரு காலத்தில் மைக்கா சொத்தாக இருந்த அந்த காப்புறுதி  நிறுவனத்துன் விற்பனை, பங்குப் பரிவர்த்தனைப் பட்டியலில் அது சேர்க்கப்பட்டது  சம்பந்தப்பட்ட தமது குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரத்தை காட்டுவதில் தோல்வி  கண்டால் ‘மேலவையைத் தவறாக வழி நடத்தியதற்காக’ செனட்டர்  பதவியிலிருந்து விலகிக் கொள்ள மஇகா தலைமைப் பொருளாளருமான அவர்  தயாராக இருக்கிறாரா என வேள்பாரி வினவினார்.

“ஜஸ்பால் தமது குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க நான் அவருக்கு ஏழு நாட்கள்  வழங்குகிறேன். அவர் அதனைச் செய்தால் நான் மஇகா-விலிருந்து விலகிக்  கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னை விசாரிப்பதற்கு நான் முன்  வருவேன்.”

“ஆனால் அவர் அதனைச் செய்யத் தவறினால் மேலவையைத் தவறாக வழி  நடத்தியதற்காக ஜஸ்பால் செனட்டர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக  இருக்கிறாரா ?” என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு-வின்  புதல்வருமான வேள்பாரி ஒர் அறிக்கையில் வினவினார்.