இந்திய வணிகர்களின் கண்டனத்தால் விற்பனைச் சந்தையைத் தடுக்க முடியவில்லை

carnial1ஜூலை 16-இல், நாடு முழுவதுமுள்ள இந்திய வணிகர்கள் வெளிநாட்டவர்களால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கடை அடைப்பின் மூலம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்..

அந்த எதிர்ப்பு பலனளிக்கவில்லைபோல் தெரிகிறது.  ஏனென்றால்,  அனைத்துலக விற்பனைச் சந்தை இன்று தொடங்கி சனிக்கிழமைவரை  பாயான் பாருவில் உள்ள பினாங்கு அனைத்துலக விளையாட்டு அரங்கில் (பிசா)  அமோகமாக நடைபெறுகிறது.

ganaaஒரு வகையில் அக் கண்டனக் கூட்டங்கள் மறைமுக விளம்பரங்களாக அமைந்தன என்கிறார் டி.பி. கனா.  அவர்  இந்த 5-நாள் விற்பனைச் சந்தைக்கு ஏற்பாடு செய்துள்ள மலேசிய-இந்திய வணிகச் சங்கத்தின் உதவிச் செயலாளராவார்.

“நாங்கள் குட்டி இந்தியாவின் வியாபாரத்தைப் பறிக்கவில்லை. இந்திய பொருள்களுக்கான சந்தையை வலுப்படுத்தி பயனீட்டாளர்களுக்கு விரிவான விருப்பத் தேர்வுகளை வழங்குகிறோம்”, என்று கனா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.