இந்த பெருநாள் காலத்தில் Apa Lagi Malaysia Mau? என்ற கேள்வியை எழுப்பி அதற்கான விடை காண எல்லா இனங்களையும் சார்ந்த மலேசியர்கள் முயல வேண்டும் என மூத்த அரசியல்வாதியான லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டுள்ளார்.
“இந்த நாட்டை நேசிக்கின்ற இன்னொரு நாட்டுக்கு குடிபெயர விரும்பாத எல்லா மலேசியர்களும் அனைத்து மலேசியர்களுக்கும் ஒற்றுமையான, இணக்கமான, ஆற்றல் மிக்க, வளர்ச்சி அடைந்த, வளமான நாடாக மலேசியாவை மாற்றுவது பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது,” என அவர் தமது நோன்புப் பெருநாள் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைய நிகழ்வுகள் ஒரு நாடாக மலேசியா வெற்றி அடைவது குறித்து நியாயமான கவலையை ஏற்படுத்தியுள்ளன என்பதை லிம் சுட்டிக் காட்டினார்.
13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உத்துசான் மலேசியா முதல் பக்கத்
தலைப்புச் செய்தியாக ‘Apa Lagi Cina Mau? என்ற கட்டுரையை வெளியிட்டது.
“‘Apa Lagi Melayu Mau?’, ‘Apa Lagi India Mau?’, ‘Apa Lagi Kadazan Mau?’ or
‘Apa Lagi Dayak Mau?’ என்னும் கேள்விகளைப் போல அந்தக் கேள்வியும்
எழுப்பப்பட்டிருக்கவே கூடாது.
நாடு சுதந்தரம் அடைந்த முதல் பத்து ஆண்டுகளில் அந்தக் கேள்விகள்
எழுப்பப்பட்டிருந்தால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் 60 ஆண்டுகள் நிறைந்த பின்னர் அந்தக் கேள்வி கேட்கப்படுவது ஏதோ கடுமையான கோளாறு இருப்பதைக் காட்டுகின்றது
உண்மையில் சரியான கேள்வி “Apa Lagi Malaysia Mau?” என்பதாகும் என லிம் சொன்னார்.
“நல்ல ஆளுமை, பொது வாழ்க்கையில் ஊழலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டம், பொதுப் பாதுகாப்பு, குறைவான குற்றச் செயல்கள், அனைவருக்கும் பொருளாதார நீதி, முன்னேற்றம், வளப்பம், தொடக்க நிலை, இடைநிலை, பல்கலைக்கழகம் வரையில் உலகத் தரத்திலான கல்வி முறை ஆகியவை அதற்கான
பதிலில் அடங்கும்.”
‘Balik Cina’, ‘Balik India’ அல்லது ‘Balik Indonesia’ என்று கூட சொல்லப்படுவதால் அவ்வப்போது எழும் தேசிய சர்ச்சைகளினால் மலேசிய நாட்டு நிர்மாணத்தில் ஏதோ கடுமையான கோளாறு உள்ளதாகத் தெரிகின்றது என்றும் லிம் சொன்னார்.
.
நீங்கள் ஆயிரம் நல்லது சொன்னாலும் எதுவும் மாற போவதில்லை. பினாங்கு , செலாங்கூர் மாநிலத்தில் பாக்கத்தான் ஆட்சி ஒன்னும் மிக சிறப்பாக நடைபெறுவதாக சொல்ல முடியாது. மாநில அரசாங்கத்திற்கு உட்பட்டு செய்ய கூடிய இந்தியர்களின் பிரச்சனைகளில் முதன்மையான தமிழ் பள்ளி நில விவகாரங்கள் அப்படியே உள்ளது. இப்பொழுது செலங்கோர் மாநில ஆட்சி குழுவில் உள்ள இந்திய பிரதிநிதி எதையும் போராடி , பெற்று தருவார் என்ற நம்பிக்கை குறைந்து கொண்டே போகிறது. உங்கள் கட்சி பிரதிநிதியான அவருக்கு மாநில அளவில் உள்ள பிரச்சனைகளை பற்றி அறிந்து கொள்ளவே இந்த 5 ஆண்டுகள் போதாது. இப்படியே போனால், அடுத்த பொதுதேர்டல் செலங்கோர் மாநிலம் கேள்விக்குறியே. நல்ல திடங்களை அறிமுகபடுத்தி உடனே செயல் படுங்கள். அதனை விடுத்தது மதிய அரசாங்கத்தை குறை சொல்லி இந்த 5 ஆண்டுகளையும் வீணடிக்காதே.