2008 பொதுத் தேர்தலுக்கு ஒராண்டு முன்னதாகத் தம்மை ஒய்வு பெறுமாறு முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுவதை முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு மறுத்துள்ளார்.
“பாக் லா ஒய்வு பெறுமாறோ அல்லது வேறு எதுவுமோ என்னைக் கேட்டுக் கொள்ளவில்லை. நான் எப்போது ஒய்வு பெற வேண்டும் என யாரும் என்னிடம் சொல்ல முடியாது. அது என்னுடைய முழு உரிமை,” என அவர் சொன்னார்.
சாமிவேலு இன்று புத்ராஜெயாவில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அளித்த
நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது நிருபர்களிடம்
தெரிவித்தார்.
‘விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்’ என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகத்தில் அப்துல்லா அவ்வாறு கூறிக் கொண்டுள்ளதற்கு அவர் பதில் அளித்தார்.
இவனுக்கு MIC இவனின் அப்பனுடைய சொத்து -இவன் எப்ப வேண்டுமானாலும் இவனின் விருப்பத்துக்கு செயல்படுவான். இப்படித்தானே நம்மவர்கள் இந்த நிலைக்கு தள்ளபட்டிருக்கின்றனர். ஏன் இந்த கேடு கெட்டத்தனம் ? மனசாட்சியே இல்லாத துரோகிகள். எப்படியோ இருக்கவேண்டிய நம்மினம் இன்று பிச்சைக்காரர் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்
இது புரியாமல் நம்மவர்கள் ஆட்டம் போடுகின்றனர்.
நன்றி சாமிவேலு அவர்களை நன்றி. படாவி மட்டுமல்ல யாருடைய பேச்சையும் கேட்காமல் முப்பது ஆண்டுகளாக மஇகா தலைவர் பதவியை நீங்கள் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருந்த காரணத்தினால்தானே பாரிசான்/அம்னோ தேர்தலில் மண்ணைக் கவ்வ வேண்டி வந்தது.
உண்மைதான் ,29 ஆண்டுகள் பதவியில் ஒட்கார்ந்து கொண்டு ஒய்வு பெரும் முடிவை மகாதிர் சொந்தமாக முடிவு செய்த பொது மூடி கொண்டிருந்தீர்கள் தூங்கு படாவி அவர்களே .அது விலகும் முடிவை எடுக்க சாமீ வேலுவின் தனிப்பட்ட விசியம் .உங்கள் அம்னோ கட்சியின் உல் விவகாரங்களில் ம இ கா தலை இட்டால் ஏற்று கொள்ள முடியுமா ?அது போல் ம இ கா வின் உல் விவகாரங்களில் தலையிட எந்த கட்சிக்கும் அனுமதி இல்லை .சாமீ வேலு பேராளர்களால் தேர்ந்து எடுக்க பட்ட தலைவர் ,ஆகயால் அவர் எப்பொழுது விடை பெற வேண்டும் என்பது அவரின் சொந்த விவகாரம் .மகாதிர் அம்னோவில் பல ஆண்டுகள் சர்வதிகாரம் செய்து கொண்டிருந்த பொது முடிகொண்டு இருந்தீர்கள் .தமிழன் என்றால் அம்னோ காரனுக்கு இளிச்ச வாயன் .
திரு சாமீ வேலு அவர்களே ,இனியும் மௌனமாக இருந்தால் உங்கள் மிது புழுதி வாரி விட்டு கொண்டுதான் இருப்பாங்கள் .நீங்கள் இந்திய சமுகத்துக்கு இந்த அரசாங்கத்திடம் கேட்டு இந்த அரசாங்கம் நிராகரித்தது .எந்த எந்த வாய்ப்பை மகாதிரும் படாவியும் பறித்தார்கள் ,நமக்கு சேர வேண்டிய என்ன என்ன உரிமைகளை வலுகட்டாயமாக பறித்தார்கள் என்று பட்டியல் இட்டு காட்டுங்கள் .இந்த மொள்ள மாறிகளுக்கு தமிழன் என்றால் கிள்ளு கீரையை போல் தெரிகிறது .மௌனம் போதும் .இந்திய சமுகத்துக்கு இளைத்த அத்தனை துரோகத்துக்கு நீங்கள் தான் காரணமா ? சொல்லுங்கே ? நீங்கள் இந்திய சமுகத்துக்கு உங்கள் அரசாங்கத்திடம் போராட வில்லையா ? உங்கள் மீது உள்ள கரைகளை போக்கும் நேரம் வந்து விட்டது .இனியும் மௌனம் வேண்டாம் .இந்த அரசாங்கத்தை தற்காத்து உங்களுக்கு கிடைத்த பரிசு போதும் .மகாதிரும் .பதவியால் நாம் இழந்தது என்ன என்ன பட்டியல் இடுங்கள் .
சாமிவேலு சொல்வது சரியே நமது கட்சியில் மூக்கினை நுழைக்க விட்டால் நாளை ம இ கா கட்சி தலைவர் யார் என்பதையும் அம்னோகாரன் முடிவு செய்வான். சாமிவேலு நல்வரோ கெட்டவரோ என்பது இங்கே நமது உரிமை நமது கட்சி நாம் தானே அவரை விரட்டனும் அல்லது பதவியை பறிக்கனும்.
வேல் முருகன் ,சாமி வேலு பதிவியில் இருக்கும்போது ,ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தாரே ,அப்பொழுதே பதிவியை ராஜனாமா செய்திருக்கலாமே !அல்லது BN அரசில் இருந்து விலகி இருக்கலாமே ! மகாதிர் ,படாவி தான் காரணம் சொல்வது முட்டாள் தனம் !
சாமி சமுதாயத்தை நடு ரோட்டுக்கு கொண்டுவந்தார் என்ற ஒன்றை தவிர வேறு எதுவும் செய்யவில்லை!
அறிவன் அவர்களே …. சரியான கருத்து….
அப்ப மகாதிரும், படாவியும் உத்தமன் என்று சொல்கிரீர்களா? சாமிவேலு ஏன் அன்று கட்சி பதவியை விட்டு விலகி இருக்க வேண்டும், அவர் என்ன கொள்ளை புற வழியாகவா கட்சி தலைவரானார் ! ஜனயகமாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு தலைவர். அவருக்கு அந்த தகுதியை அவர் சார்ந்த பேராளர்கள் வழங்கி உள்ளனர் .பரிசான் அரசாங்கத்தில் இருந்து ஏன் சாமிவேலு விலக வில்லை என்று கேட்பது அறிவிழந்த கேள்வி .அப்போது உள்ள சூழ்நிலையில் பாரிசானை விட்டு விலகி ம இ கா தன்னிச்சையாக செயல் பட்டு இருந்திருக்க முடியுமா ? இப்போது போல் அன்று மக்கள் கூட்டனி இல்லை ,அவர்கள் குள்ளே அன்று ஆயிரம் உல் பூசல் இருந்தது நாடே அறிந்த விசியம் ,அபோழ்து ம இ கா விலகி இருந்தால் இன்று இந்திய சமுகத்தின் நிலைமை இன்னும் தலைகிழாக மாறி இபோழ்து விட பல உரிமைகளை இழந்து விட்டு இருப்போம் .சாமிவேலு முடிந்த மாட்டும் போராடி இருக்கிறார் . அவரது தைரியம் எந்த ம இ கா தலைவருக்கும் வராது .எனக்கு ஒன்னு மட்டும் புரிய வில்லை ,இந்த படாவி சொல்றதை நம்புகிறிர்கள் மகாதீரை நம்புகிறிர்கள்.இவன்கள் செய்த அநியாயம் கொஞ்சம் நஞ்சம் இல்லை .எல்லாவற்றுக்கும் சாமிவேலு என்று புளுகு மூட்டயை நிறுத்துங்கள் .வேத மூர்த்தி நாடகம் எத்தனை நாளுக்கு நீடித்தது ,மகாத்மா காந்தி படத்தை குடுத்து தெருவில் இறங்கி பாரிசான் அரசாங்கம் தமிழனின் எதிரி சாமிவேலுதான் அனைத்துக்கும் காரணம் என்று புளுகு மூட்டையை அள்ளி விட்டு மக்களின் மனதில் நஞ்சை வளர்த்தார் ,ஆனால் இறுதியில் என்ன ஆனது ,தற்பொழுது அதே பாரிசான் அரசாங்கத்தில் பதவி வாங்கி கொண்டு வாயை திறப்பது கிடையாது .சாமிவேலு அப்படி இல்லை அதே அரசாங்கத்தில் இருந்துவருகிறார் .இவரின் முழு திறமையை அந்த அரசாங்கம் நல்லா பாவித்து கொண்டது .பொதுப்பணி துறையை சாமிவேலுவிடம் கொடுத்து சாமிவேலுவின் முழு திறமையையும் மகாதிர் பாவித்து கொண்டார் .மகாதிர் இந்திய சமுகத்துக்கு தர மறுக்க பட்டதை மக்கள் துணையோடு சாமிவேலு இந்திய சமுகத்து நிறை வேற்றி இருக்கிறார்.
சாமீ பொதுவாக நம்மவர்களுக்காக என்ன செய்தான்? அவனின் பிள்ளைகளுக்கும் அவனின் கூஜக்களுக்கும் தானே எல்லாமே. maika எனக்கூறி நம்மின் கோடிகள் அவனின் பையில் தானே நின்றது? நம்மவர் எத்தனை பேர் எவ்வளவு இழந்தனர்? இதற்க்கு எல்லாம் யார் காரணம்? ஆளும் கட்சியில் இருந்து ஒன்றும் செய்யாமல் நம்மவர்களை முட்டாள்கலாக்கியது யார்? நம்மவர்களுக்கு காட்டிகொடுப்பது நம் ரத்தத்தில் ஓடுகின்றது போலும் ! எனக்கு பேசி பேசியே சீ என்றாகிவிட்டது என்றாலும் பேசாமலும் இருக்க முடியவில்லை.அத்துடன் நம்மவர்கள் நம்முடைய மலேசியா வரலாறு -உண்மையான-வரலாறு பற்றி தெரிந்து இருக்க வேண்டும். நம்மில் பெரும்பேர் நம்மின் வரலாறு தெரியாமல் முதுகு எலும்பில்லாமல் இருக்கின்றனர்.
உண்மையை சொன்னால் இந்த நந்தாவுக்கு புடிக்காது போலும் .
இவனுக்கும் வக்காலத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களே ! ஐய்யகோ, நாட்கள் ஆனபின் நம்மவர்களுக்கு உணர்வும் மரத்துப்போய் விடுகிறது ! பழையதும் மறந்து விடுகிறது ! இவனே நம் இனத்தை கொள்ளையடிக்கும்போது மாற்றானை குறைச்சொல்லி என்ன பயன் ?
டத்தோ சாமிவேலு பதவி விலக முடியாது என்று சொன்னது சரியே. ம இ.கா வுக்கு யார் எவ்வளவு காலம் தலைவராக இருக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் உறுப்பினர்களே அன்றி அம்னோ அல்ல.சாமிவேலு காலத்தில் அவர் முன் வைத்த பெரும்பாலான கோரிக்கைகளுக்கு மகாதீர் செவி செவிசாய்க்கவில்லை.அவரது செல்வாக்கு உச்சத்தில் இருந்ததால் இந்தியர்களை கிள்ளுக்கீரைகளாக நடத்தினார். அவருக்குப் பின் வந்த படாவியும் அதே போக்கையே கடைபிடித்தார். ஹிண்ட்ராப் போராட்டமே அம்னோ காரர்களின் கண்ணை ஒரளவு திறந்தது.இந்தியர்களின் வாக்கு முக்கியம் என்பதை உணரத் துவங்கினர். அதன் பின்னரே இந்தியர்களை மதிக்கத் துவங்கினர். எனவே இந்தியர்களின் பின்னடைவுகளுக்கு சாமிவேலுவை மட்டும் குறை கூறுவது முறையல்ல.அவரது சக்திக்கு உட்பட்டு காரியங்களை செய்தார்.எல்லா மனிதர்களைப் போல் அவரிடமும் சில பலவீனங்க்கள் இருந்தன என்பதை ஒத்துக் கொள்ள தான் வேண்டும்.ஆனால் அவரது காலத்தில் கட்சி கட்டுபாட்டுக்குள் இருந்தது. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் என்ற நிலை இருக்கவில்லை.
சாமிவேலு இன்னும் என்ன செய போகிறாய் . உனக்கு மனசாட்சி என்று ஒன்று உண்டா . கடவுளுக்கு சேவை செய் உன் பாவங்கள் துடைகபடும் .
நன்றும் தீதும் பிறர் தர வாரா…நாம் சரியான தலைமைத்துவம்
இன்றி இருக்கிறோம்…மக்கள் சரியாக இருந்தால் தலைவர்கள் சரியாக இல்லையே… அப்புறம் எப்படி நல்ல தலைவர்கள் உருவாவார்கள்.எல்லாமே இங்கு எடு பிடி..வெட்டு குத்து..கூஜா
தூக்கி…படித்தவனு சரி படிக்காதவனு சரி எல்லாமே……….
உன் உரிமை என்று பேசுகிறாய்,
mic தலைவன் என்ற நிலையில் உன் கடமையை சரியாக செய்தாயா?
நானே ராஜா, நானே மண்டை என்று மக்களை மண்ணாகிய
கர்வம கொண்டவன் ….!
மண்ணு தின்னும் நேரம் வந்த போது உனக்கு ஏன் இன்னும் வீராப்பு! இருக்கும் பொன்னான நேரத்தை போதி தர்மர் போல இந்த பூ உலகில் புண்ணியத்தை தேடு, புண்ணாக்கு தேடாதே. செய்த பாவத்தை போக்குவதற்கு வழி தேடு! மற்றவனை அழிக்க வகை செய்யாதே! அடுத்த ஜென்மத்தில் மனிதனாய் பிறக்க வரம் தேடு! மட சாம்பிரானியாய் ஆஹி விடாதே!
முடி சார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவது கண்டுபின்பும் இந்த பிடி சார்ந்த வாழ்வை நினைபதலளால் பொன்னம்பலவர் அடி சார்ந்து நாம் உய்ய வேண்டுமென்று அறிவாரில்லை. தொந்தி வயுறு தம்மது என்று தாம் இருக்க, நாய் நரி கழுகு, புழு தமது என்று தாம் இருக்கும். இதை எண்ணி பாரும் மாண்பு மிக்க மாஜி மந்திரி அவர்களே.
ஓய்வுத் தேதி உங்களது தனிப்பட்ட உரிமை. இல்லாவிட்டால் இன்னும் ஒரு பதவியை வைத்துக்கொண்டு இப்படி ஆட்டம் ஆடுவீர்களா. இந்தப் பதவி நீங்கள் கெஞ்சி வாங்கிய பதவி என்பதை மறந்து விடாதீர்கள். அத்தோடு விட்டீர்களா. இப்போதும் ம.இ.கா.வில் மூக்கை நுழைத்து கட்சியை சின்னா பின்னமாக்கப் பார்க்கிறீர்கள். நீங்கள் இந்த இந்திய சமுதாயத்தையே கொள்ளையடித்து குபேரனாகி விட்டீர்கள். இன்னும் என்ன தான் உங்களுக்குத் தேவை? உங்கள் மகனையும் கொள்ளையடிக்கும் கும்பலுக்குத் தகுதி உள்ளவராக்கி விட்டீர்கள். இன்னுமா நீங்கள் இந்தியர்களின் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்க வேண்டும்?