முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது புத்தகத்தில் இன்னொரு முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் முகமட்டைக் குறை கூறியுள்ளார்.
இப்போதைக்கு அதற்குப் பதில் அளிக்க டாக்டர் மகாதீர் மறுத்து விட்டார்.
“நான் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அது குறித்து காலப் போக்கில் கருத்துச் சொல்வேன்,” என்றார் அவர்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று வழங்கிய நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் மகாதீர் நிருபர்களைச் சந்தித்தார்.
அந்தப் புத்தகத்தை அவர் படித்தாரா என மகாதீரிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த மகாதீர்,” நான் அந்த புத்தகத்தை வாசிக்கவில்லை, ஆனால் அது குறித்த செய்திகளை நான் மலேசியாகினி.காம் வழியாக படித்தேன்,” என்றார்.
அப்துல்லாவின் புதிய புத்தகத்தின் தலைப்பு ‘விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்’ என்பதாகும்.
அதில் மகாதீர் தமது நிர்வாகத்தில் தலையிட்டார் என்றும் ‘தலைக்கனம் பிடித்தவர்’ என்றும் ‘முழுக்க முழுக்க முரண்பாடுகளைக் கொண்டவர்’ என்றும் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
உன்னோட மொள்ளமாரி தனம் இந்த தூங்கு முஞ்சி தலையனுக்கு நல்லா தெரியும் ,நீ அவனை பத்தி ஒடச்சி விட்டால் அவன் உன்னைய பத்தி புட்டு புட்டு வைப்பானு பயம் .
மகாதிர் மிகவும் நயவஞ்சக பேர்வழி.மலாய் ஆதிக்கத்தை நிலைநாட்ட இனம்,மதம்,மொழி,அரசர்கள் இவற்றை கூறியே விஷத்தை ஏற்றி ஆட்சி செய்தவன். காலமும்,சரித்திரமும் இதனை ஒருநாள் நிச்சயம் வெளிச்சம் போட்டு காட்டும்.
மல்லாக்கப் படுத்துக் கொண்டு பாக் லா சொன்ன உண்மைகளை எப்படி திருத்தி பொய்யாகப் பின்னுவது என்று யோசிக்க நீரம் வேண்டாமா? இவன் உலகில் உள்ள எல்லா தலைவர்களையும் குறை சொல்லுவான் ஆனால் இவனைப் பற்றி யார் எவ்வளவு ஆதாரத்தோடு குறை சொன்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் இல்லாத குறிகிய மனப் பான்மை இது.
மலேசியாவை பீடித்துள்ள ‘பீடை’ மகாதிர் முகமது சிறை கம்பிகளை என்ன, மற்றும் இசா சட்டதில் விசாரிக்கப்பட சகல தகுதிகளும் நிறைந்தவன்! ஆனால் அம்னோ காரன் பதவியில் இருக்கும் வரையில் அது நடக்காது!!