அம்னோ சீர்திருத்தத்துக்கு இசையாதது தாம் எதிர்நோக்கிய பெரிய சவால்களில் ஒன்று என முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி கூறியுள்ளதை பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டுள்ளார்.
மக்கள் எண்ணங்களை மாற்றுவது ‘மாபெரும் பணி’ எனக் குறிப்பிட்ட அவர் அதற்கு சில தலைமுறைகள் பிடிக்கலாம் என்றார்.
“விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா அகமட் படாவியின் ஆண்டுகள்” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அப்துல்லாவின் கருத்துக்கள் பற்றி நஜிப் பதில் அளித்தார்.
“நான் அதனை ஒப்புக் கொள்கிறேன். காரணம் அம்னோ மாற வேண்டும்.
கட்சியின் அமைப்பு விதிகளை மாற்றியதின் வழி நாங்கள் அந்தப் பணியைத் தொடங்கியுள்ளோம். ஆனால் மக்கள் எண்ணங்களை மாற்றுவது இன்னொரு ‘மாபெரும் பணி’ என்பது உங்களுக்குத் தெரியும். அதற்குக் காலம் பிடிக்கும். நான் அம்னோ தலைவர்.”
“அந்த மாற்றம் ஏற்பட சில தலைமுறைகள் கூட தேவைப்படலாம்,” என நஜிப் இன்று நிருபர்களிடம் கூறினார்.
ஹ ஹ ஹா ……………………………
நோன்புபெருநாளில் ஓர் உண்மையை ஒப்ப்புக் கொண்டுள்ளமைக்கு வாழ்த்துக்கள். முதலில் மாறுங்கள் பிறகு மக்கள் உங்களுக்கு ஓட்டு போடுவதைப் பற்றி பேசுவோம்.
இவர்களுக்கு இப்பதான் புரிஞ்சதோ?
தன்டிக்கப்படாதவரை திருடர்களும், மோசடிகாரர்களும் கொல்லைகூட்டமும் திருந்த வாய்ப்பில்லை!