பினாங்கில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

shootபினாங்கு மக்களை மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்  திடுக்கிட வைத்துள்ளது.

நள்ளிரவு வாக்கில் ஜாலான் டத்தோ கிராமாட் வட்டாரத்தில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது. நேற்றிலிருந்து இதுவரை மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அம்மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

 

முதலாவது சம்பவத்தில் ஜாலான் அன்சனில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இரண்டாவது சம்பவத்தில் ஜாலான் உத்தமாவில் உள்ள  ஒரு வீட்டை நோக்கி பலமுறை சுட்டிருக்கிறார்கள்.

ஆகக் கடைசியாக நிகழ்ந்த சம்பவத்தில் கேளிக்கை விடுதியின் ‘பவுன்சரை’நோக்கி ஏழு முறை சுட்டிருக்கிறார்கள். ஒரு தோட்டா மட்டும் அவரது தொடையில் பாய்ந்தது.

சுடப்பட்டவருக்குக் குண்டர் கும்பல் தொடர்பு இருக்கிறது எனப் போலீஸ் கூறிற்று. ஆனால், அவர்மீது குற்றப் பதிவு எதுவும் இல்லை. சுடப்பட்டவர் பினாங்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.