முகநூல் பக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய உதவியாளர் எனக் கூறப்பட்ட ஒருவரின் முகநூல் பக்கத்தில் சேர்க்கப்பட்ட நோன்புப் பெருநாள் வாழ்த்துக் கார்டில் இன்னொரு முகநூல் ‘சமய இழிவு’ காணப்பட்டுள்ளது.
‘lemang’, ‘ketupat’ ஆகியவற்றுக்கு இடையில் வைக்கப்பட்ட வேக வைக்கப்பட்ட பன்றித் தலையைக் காட்டும் அந்தப் படத்துக்கு எழுதப்பட்டிருந்த விளக்கம் அந்த உணவை அனுபவிக்குமாறு முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுத்தது.
‘அலன் தொங்’ பெயரில் உள்ள அந்தப் பதிவைப் பார்ப்பதற்கு தேடுதல்
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அது காணப்படவில்லை.
என்றாலும் ஸ்துலாங் டிஏபி சட்டமன்ற உறுப்பினர் அண்ட்ரூ சென் கா எங் உதவியாளரான அலன் தொங், அந்தப் படத்தையும் விளக்கத்தையும் சேர்ப்பதற்கு யாரோ ஒருவர் தமது அடையாளத்தைப் பயன்படுத்தியுள்ளதாக தமது அண்மைய பதிவில்
குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன் தினம் காலை 9 மணி வாக்கில் தமது கைத் தொலைபேசி வழி கொலை மருட்டல் தமக்கு வந்தது என்றும் தனிப்பட்ட எண் ஒன்றிலிருந்து வந்த அதனை தாம் அலட்சியம் செய்து விட்டதாகவும் தொங் சொன்னார்.
அந்தப் பதிவைக் கண்டு பிடித்த பின்னர் அவர் அதே நாளன்று ஜோகூர் பாருவில் உள்ள தாமான் பெலாங்கி போலீஸ் நிலையத்தில் அந்த விஷயம் பற்றி புகார் செய்துள்ளார்.
இது அம்னோவின் வேலை என்று மட்டும் புரிகிறது!