டிஏபி-இல் மீண்டும் கட்சி தேர்தல் நடத்தப்படுமானால் அதன் மத்திய செயல்குழுவுக்குப் போட்டியிடப்போவதாகக் கூறுகிறார் முன்னாள் உத்துசான் மலேசியா செய்தியாளர் அம்ரான் அஹ்மட்.
அம்ரான், டிஏபி-இன் முன்னாள் உதவித் தலைவர் அஹ்மட் நூரின் மகனாவார். அந்த வகையில் மத்திய செயல்குழு உறுப்பினராக தேவையான வாக்குகளைப் பெற முடியும் என நம்புகிறார்.
டிசம்பர் மாதத் தேர்தலில் வாக்குகள் எண்ணுவதில் குளறுபடி நிகழ்ந்திருப்பதால் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என சங்கப் பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்) உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆர்ஓஎஸ் சட்டப்பூர்வமான காரணங்களைக் காட்டினால் தவிர மறுதேர்தல் நடத்தப்போவதில்லை என்று டிஏபி கூறியுள்ளது.
மீண்டும் DAP கட்சி தேர்தல் நடத்தப் படுமேயானால் , கட்சி காலாவதியாகாமல் பிழைத்துக்கொள்ளும். சிறிய விஷயம்தான். ஆனால் லிம் குவான் எங்கின் ஆட்கள் பெரும்பாலோர் தோல்வி காண நேரிடும். இந்த அவமானத்தை அவரால் ஏற்க முடியாது. ஆகவே, கட்சி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பிடிவாத போக்கில் செயல் படுகிறார். கட்சியிலுள்ள சிலர் தற்போது புதிய கட்சிக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.