குறை சொல்லிக்கொண்டே இருந்தால் போலீசாரால் எப்படி குற்றத்தை எதிர்க்க முடியும்?: கீர்

khirசில தரப்புகள் போலீசைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பதால் போலீசாரால் குற்றங்களை எதிர்த்துப் போராட முடிவதில்லை என்கிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ.

“போலீசும் குற்றவாளிகளுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் நிகழ்ந்தால் அதில் அத்தரப்புகள் போலீசிடம்தான் குறைகாண முயலும்.

“இந்நிலையில் நாம் போலீசாக இருந்தால், நடவடிக்கை எடுப்பதைவிட சும்மா இருப்பதே நல்லது என்றுதான் நினைப்போம்”. கீர், தம் வலைப்பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.