பார்சலோனா- மலேசியா ஆட்டம் இடம் மாறுகிறது

மலேசியக் கால்பந்துக் குழுவுக்கும் பார்சலோனா குழுவுக்குமிடையில் இன்றிரவு 8.45க்கு நடைபெறவிருந்த ஆட்டம் ஏற்கனவே திட்டமிட்டப்படி புக்கிட் ஜலில் அரங்கில் நடக்காது.  அதற்குப் பதிலாக ஷா ஆலம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

பிஎஸ்சி  சோக்கர்  மலேசியா நிர்வாக இயக்குனர் எஃபெண்டி ஜகன் அப்துல்லாவைத் தொடர்புகொண்டபோது அவர்  அதை உறுதிப்படுத்தினார்.

புக்கிட் ஜலில் அரங்கின் திடல் மோசமான நிலையில் இருப்பதால்தான் இந்த இடமாற்றம்.