டிஏபி தேசிய தலைவர் கர்பால் சிங், தம் சொத்து விவரங்களை அறிவிக்க தயார் என்று கூறித் தம்மைப்போலவே தம் பக்காத்தான் சகாக்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பக்காத்தான் தலைவர்கள்,, மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிகள், முனிசிபல் கவுன்சிலர்கள் எல்லாருமே சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்றாரவர்.
பாலேக் பூலாவ் பிஎன் எம்பி ஹில்மி யாஹ்யா, பிஎன்னின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் சொத்து விவரங்களை அறிவித்திருப்பதால் பினாங்கு அரசின் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியதில்லை என்று கூறியுள்ளதையும் கர்பால் குறைகூறினார்.
“அறிவிப்பது என்றால் பிரதமரிடம் அறிவிப்பதில்லை. பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். பிரதமரும்தான் அவ்வாறு செய்ய வேண்டும்”, என்றார்.
என்ன இது, பெரிய வம்பா போச்சு! சொத்துக்களை அறிவிக்கவா அரசியலுக்கு வந்தோம்? சொத்துக்களை சேர்க்கத்தானே அரசியலுக்கு வந்தோம். [இப்படி அவர்களது மனசாட்சி சொல்லுமோ?]
அன்வாரும், ஹாடியும் தப்பிக்கக் கூடாது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் பி.என். காலத்தில் அன்வாரும் அம்னோவைத் தானே பின்பற்றினார். இப்போது அவர் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பது பி.என்.னுக்கு முன்பா அல்லது பின்பா! ஹாடிக்கு அவ்வளவு பிரச்சனை இராது என்றே தோன்றுகிறது.