இராணுவ வீரர் ஒருவர் மலேசிய- தாய் எல்லையில் சுடப்பட்டுக் கடுமையாகக் காயமடைந்துள்ளார்.
அவர் புக்கிட் காயு ஹித்தாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதிகாலை மணி 4.30க்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பெரித்தா ஹரியான் கூறியுள்ளது.
அந்த 26-வயது வீரர், கம்பிவேலி வெட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார்.
“அதைச் சரிசெய்ய முயன்றபோது ஒரு வெடிச் சத்தம் கேட்டு ஓடி இருக்கிறார்.
“ஓடிக் கொண்டிருந்தபோது தாய்லாந்து எல்லையிலிருந்து வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு அவர்மீது பாய்ந்து கீழே விழுந்தார்”, என கெடா குற்றப்புலன் ஆய்வுத் துறை (சிஐடி) தலைவர் நஷிர் யா தெரிவித்தார்.
சுடப்பட்டவர் கங்கார், துவாங்கு பவிசியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த செய்தி வந்திருக்குமேயானால், எல்லோரும் பிரமிக்கும் வகையில் இருந்திருக்கும். இப்பெல்லாம் எங்க நாட்டிலே இந்த விஷயம் ரொம்ப ரொம்ப சகஜமப்பா! சராசரி ஒரு நாளைக்கு ஒரு துப்பாக்கி சூடு சம்பவம். அமேரிக்கா, இங்கிலாந்து நாடுகளைப் போன்று நாமும் முன்னேறி விட்டோம்.