இந்த நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் பற்றி இரண்டு முன்னாள் பிரதமர்களது புத்தகங்கள் அண்மையில் வெளியாயின.
மலேசியாவின் அப்துல்லா அகமட் படாவி, சிங்கப்பூர் லீ குவான் இயூ ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்தப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை மலேசியர்கள் இன்னும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வேளையில் பிரபலமான இன்னொரு அரசியல்வாதியான கர்பால் சிங் பற்றிய இன்னொரு புத்தகமும் வெளியீடு காணவிருக்கின்றது.
325 பக்கங்களைக் கொண்ட அந்த புத்தகத்தின் தலைப்பு ‘கர்பால் சிங்:
ஜெலுத்தோங் புலி’ ( “Karpal Singh: Tiger of Jelutong”) என்பதாகும்.
நியூசிலாந்தின் பொதுச் செய்தி நிருபரான 64 வயது டிம் டொனொக் அந்தப் புத்தகத்தை எழுதியுள்ளதாக கர்பால் சொன்னார். அந்தப் புத்தகம் தயாராவதற்கு 26 ஆண்டுகள் பிடித்ததாக அவர் தெரிவித்தார்.
கர்பாலுடைய அரசியல் வாழ்க்கையும் சட்டத் தொழிலும் அந்தப் புத்தகத்தில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும்.