முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தமது நிர்வாகம் பற்றிய புத்தகம் ஒன்றுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளார் என அம்னோ இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினரான லோக்மான் அடாம் கூறிக் கொண்டுள்ளார்.
‘விழிப்பு: மலேசியாவில் அப்துல்லா படாவியின் ஆண்டுகள்’ என்னும்
தலைப்பிலான அந்தப் புத்தகத்தில் தமக்கு முன்னைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை அப்துல்லா குறை கூறியுள்ளது பற்றி லோக்மான் குறிப்பிட்டார்.
“வெளியீட்டாளர்கள் பாக் லா-வைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்,” எனத் தாம் நம்புவதாக அவர் சொன்னார்.
“அவர் விரைவில் பதில் அளிக்கப் போகிறார். அம்னோ எந்திரமும் வெகு
வேகமாகப் பதில் கொடுக்க வேண்டும்,” என அவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மகாதீர் தமது நிர்வாகத்தில் தலையிட்டதாக அப்துல்லா பேட்டியில்
தெரிவித்துள்ளார்.
தாம் திட்டமிட்ட சீர்திருத்தங்களுக்கு அம்னோவில் கடுமையான எதிர்ப்பு இருந்தது என்றும் அவர் கூறிக் கொண்டார்.
உண்மையை சொன்னால் பலருக்கு உரைக்கும். அப்பொழுது அவர்கள் சொல்வதைத் தவிர மற்றவையெல்லாம் பொய் என்று உரைப்பர்.
சுருக்கமாக சொன்னால் பாக் லா, pm காலத்தில், மகாதீரின் ரிமோட் கொன்ரோல் சரியாக செயல்ப்படவில்லை .
நிஞ்சா ! மகாதிரின் ரிமூட் கொன்றோல் நஜிப்பிடம் வேலை செய்கிறதா ?
Paklah Pm Di sanjung tinggi.