தமது பெயரில் சமய உணர்வுகளைத் தொட்டுள்ள முகநூல் பதிவுகள் சதிநாச வேலை என டிஏபி ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் சென் கா எங்-கின் உதவியாளர் அலன் தாங் வருணித்துள்ளார்.
முகநூலில் தமது பெயரின் கீழ் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பன்றித் தலை இடம் பெற்றுள்ளது பற்றியும் மலாய்க்காரர்கள் ‘சாக வேண்டும்’ என தாம் சொன்னதாக கூறப்பட்டுள்ளது பற்றியும் குறிப்பிட்ட போது அவர் அவ்வாறு
சொன்னார்.
யாரோ ஒருவர் தமது பெயரைப் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கை
உருவாக்கி அந்தப் பதிவையும் படத்தையும் சேர்த்துள்ளதாக தாங் கருதுகிறார்.
“இது மிதமிஞ்சிய அவதூறு ஆகும். நான் போலீசில் புகார் செய்துள்ளேன்.
போலீசார் அதனை விவேகமாக புலனாய்வு செய்து, அந்த அவதூறுக்குப்
பொறுப்பான குற்றவாளியைக் கைது செய்வர் என நான் நம்புகிறேன்,” என்றார் அவர்.
தாம் அந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் என்னைத் தாக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் தாங் முகநூல் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பொலிசார் இதில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.