அன்வார்: லீ குவான் இயூ எண்ணங்கள் காலம் கடந்தவை

anwarமலேசிய அரசியல் குறித்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் முன்னாள் சிங்கப்பூர்  பிரதமர் லீ குவான் இயூ-வும் அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை  எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார்.

‘ஒரு மனிதனின் உலகக் கண்ணோட்டம்’ என்ற லீ-யின் புதிய புத்தகம் பற்றிக்  கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது ‘அந்த முதுநிலைத்  தலைவருடைய எண்ணங்கள் குறிப்பாக இன அடிப்படை அரசியல் பற்றிய  கருத்துக்கள் காலம் கடந்தவை’ என அன்வார் சொன்னார்.

லீ பழைய காலத்தைச் சேர்ந்தவராக இருக்கும் வேளையில் இந்த நாட்டில்  ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியான அம்னோவை திருத்த முடியாமல்  இருக்கிறார் என அன்வார் கிண்டலாகத் தெரிவித்தார்.

“லீ குவான் இயூ-வைப் பொறுத்த வரையில் அவரிடம் போதுமான புரிந்துணர்வு  இல்லை என்பது தெரிகிறது. நஜிப்பைப் பொறுத்த மட்டில் அவர்  மலேசியர்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லை,” என  அன்வார் மாச்சாங் பூபுக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் ஏற்பாடு செய்த  நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பின் போது நிருபர்களிடம் கூறினார்.anwar1

லீ-யின் எண்ணங்கள் பெரும்பாலும் மகாதீர் தலைமுறையை  பிரதிநிதிக்கின்றன-அவை காலம் கடந்தவை. உரிமைகள், இனம், கறுப்பு வெள்ளை  என்ற அடிப்படையிலேயே எல்லாவற்றையும் பார்க்கிறார் என அன்வார் மேலும்  சொன்னார்.

நஜிப் உண்மையான மாற்றங்களை அல்லது சீர்திருத்தங்களைக் கொண்டு வர  முடியாமல் தடுமாறுகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். அது நிகழ  ‘தலைமுறைகள்’ பிடிக்கும் என்றும் நஜிப் சொல்வதாக அன்வார் குறிப்பிட்டார்.

anwar2“மலேசியா சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டு கடந்து விட்டதை நஜிப்
உணரவில்லை எனத் தோன்றுகிறது.”

நாம் புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கினோம். அதனால் சில குடும்ப  உறுப்பினர்களும் சேவகர்களும் மட்டுமே பயனடைந்தனர்,” என அன்வார்  குறிப்பிட்டார்.

“பெரும்பான்மை மலாய்க்காரர்களுடைய அவலத்தை அலட்சியம் செய்வது  அல்லது ஏழைகளை ஒரங்கட்டுவது நல்ல தேர்வாக இருக்க முடியாது. அதனை  தேவை அடிப்படையில் பாருங்கள். இன அடிப்படையில் அல்ல.”