அமைச்சர்: முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது நீதிமன்றம் முடிவு செய்யும்

joseph kurupமுஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த முடியுமா  முடியாதா என்பதை நீதிமன்றங்கள் முடிவு செய்வதற்கு கூட்டரசு அரசாங்கம்  விட்டு விடும் என பிரதமர் துறை அமைச்சர் ஜோசப் குருப் சொல்கிறார்.

“அந்த விஷயம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. ஆகவே நீதிமன்றங்கள் முடிவு  செய்ய விட்டு விடுவோம்,” என அவர் சொன்னார்.

அவர் நேற்றிரவு MCCBCHST எனப்படும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து,  சீக்கிய, தாவே ஆலோசனை மன்றத்தின் 30வது ஆண்டு நிறைவு விருந்தில் கலந்து  கொண்ட பின்னர் குருப் நிருபர்களிடம் பேசினார்.

2011ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகரித்த 10 அம்சத் தீர்வு அடிப்படையில்  ‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதார் பயன்படுத்துவதற்கு கூட்டரசு  அரசாங்கம் அனுமதிக்குமா என நிருபர்கள் தொடுத்த கேள்விக்கு அமைச்சர் பதில்  அளித்தார்.